அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” – திருவண்ணாமலையில் அறிமுகம்! – மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை பற்றி கலந்துரையாட VIT வேந்தர் முனைவர். கோ. விசுவநாதன் அழைக்கிறார்!!

அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை எளிதாக பெறும் வகையில், “அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக இன்று (ஜனவரி 30, 2025) திருவண்ணாமலையில் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் விஐடி பலபல்கலைக்கழக வேந்தரும், அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை நிறுவனருமான முனைவர். கோ. விசுவநாதன் தலைமையேற்கிறார். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து மேல்நிலைப் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், சங்கங்கள் ஆகியவை இதில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதிக்கின்றன.

நிகழ்வு விவரம்:

நாள்: 30 ஜனவரி 2025 (வியாழக்கிழமை)
நேரம்: பிற்பகல் 3.00 மணி
இடம்: இராஜா இராணி மஹால், புதிய பைபாஸ் ரிங் ரோடு, சேரியந்தல், திருவண்ணாமலை.

மாணவர்கள், பெற்றோர், கல்வி நிறுவனர், ஆசிரியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கலாம்.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.